மது அருந்த உண்டியலை உடைத்தவருக்கு 'காப்பு'

Added : ஜன 20, 2022
Advertisement
சித்தாமூர்-செஞ்சி அருகே அமைந்துள்ள விற்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் முத்து, 62. இவரது மகன் விஜயகுமார் 35. இவர், சித்தாமூர் பகுதியில் தங்கி தினக்கூலியாக கட்டட தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மது அருந்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால், சித்தாமூர் அருகே அமைந்துள்ள நடுபழனி முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்த உண்டியலை உடைத்துள்ளார்.அதிர்ஷ்டவசமாக அன்று காலை

சித்தாமூர்-செஞ்சி அருகே அமைந்துள்ள விற்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் முத்து, 62. இவரது மகன் விஜயகுமார் 35. இவர், சித்தாமூர் பகுதியில் தங்கி தினக்கூலியாக கட்டட தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மது அருந்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால், சித்தாமூர் அருகே அமைந்துள்ள நடுபழனி முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்த உண்டியலை உடைத்துள்ளார்.அதிர்ஷ்டவசமாக அன்று காலை உண்டியலில் இருந்த காணிக்கை முழுதும் கோவில் நிர்வாகத்தால் தணிக்கை செய்யப்பட்டதால், வெறும் 80 ரூபாய் மட்டுமே இருந்தது. அதனால் விரக்தி அடைந்த திருடன் உண்டியலையும் சேர்த்து திருடிச் சென்றார்.அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மடக்கி விசாரித்ததில், விஜயகுமார் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, பொதுமக்களை தாக்க முற்பட்டுள்ளார்.இதனால் ஒன்று கூடிய பொதுமக்கள், விஜயகுமாரை 'கும்மி' எடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயகுமாரை கைது செய்து மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X