பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை சீரமைக்க கோரிக்கை| Dinamalar

பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை சீரமைக்க கோரிக்கை

Added : ஜன 20, 2022 | |
பெருங்குடி-தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் பயன்படுத்தும், பெருங்குடி கார்ப்பரேஷன் சாலையை, போக்குவரத்திற்கு உகந்த வகையில் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் சாலை.ராஜிவ்காந்தி சாலையில் இருந்து பெருங்குடி குப்பை கிடங்கிற்கு செல்லும் பிரதான சாலையாக இது விளங்குகிறது.

பெருங்குடி-தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் பயன்படுத்தும், பெருங்குடி கார்ப்பரேஷன் சாலையை, போக்குவரத்திற்கு உகந்த வகையில் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் சாலை.ராஜிவ்காந்தி சாலையில் இருந்து பெருங்குடி குப்பை கிடங்கிற்கு செல்லும் பிரதான சாலையாக இது விளங்குகிறது. இச்சாலையை, நாள் ஒன்றுக்கு நுாற்றுக்கணக்கான குப்பை, கழிவுநீர் லாரிகள் பயன்படுத்துகின்றன.மேலும், செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், குமரன் நகர், சீவரம் உள்ளிட்ட பகுதி மக்களின் போக்குவரத்திற்கு பிரதான சாலையாகவும் இது விளங்கிறது.இச்சாலை, கனரக வாகன போக்குவரத்திற்கு ஏற்ப தரமானதாக அமைக்கப்படவில்லை. அதேபோல், குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல துறையினர், அவ்வப்போது தோண்டிய பள்ளமும் முறையாக மூடப்படவில்லை.இதனால் தற்போது, போக்குவரத்திற்கு லாயக்கற்று மிக மோசமாக காட்சியளிக்கிறது.ஒரு மழை பெய்தாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் மேடு, பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். கனரக வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்த ஓரம் கட்டப்படுகின்றன.எனவே, இச்சாலையில் செல்லும் வாகன போக்குவரத்தை கருத்தில் வைத்து, தரமான சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X