மடிப்பாக்கம்--பெருங்குடி மண்டலத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பது குறித்து கூடுதல் மாநகர் நல அலுவலர், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை மாநகரில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பெருங்குடி மண்டலத்தில், ௪,௦௦௦த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு, 400 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாக்கம் குறைவாக உள்ளவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.இதற்காக பெருங்குடி மண்டலத்தில் ஒரு வார்டுக்கு ஐந்து பேர் வீதம், 55 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று, பரிசோதனை நடத்தி தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், ஊழியர்களின் செயல்பாடுகள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்து, கூடுதல் மாநகர் நல அலுவலர் சுகன்யா நேற்று ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தினர்.இந்நிகழ்வில், மண்டல சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE