மடிப்பாக்கம்- -உள்ளகரம் கோவிலில், ஆஞ்சநேயர் சிலை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, உள்ளகரம், சாமி நகரில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ௨ அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருந்தது.கடந்த அனுமத் ஜெயந்தி அன்று, அந்த சிலை திருடப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகியான, உள்ளகரம், மண்டபம் லிங் ரோட்டைச் சேர்ந்த குருராஜன், 71, என்பவர் புகார் செய்திருந்தார்.இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், சிலையை திருடியது, பூந்தமல்லி, வேப்பூர் கிராமம், கக்கன்ஜி தெருவைச் சேர்ந்த ஐசக், 34, என்பது தெரியவந்தது. அவரை பிடித்து, ஆஞ்சநேயர் சிலையை மீட்டனர். விசாரணையில், முருகன் என்பவருடன் சேர்ந்து சிலை திருடியதும், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் சிலை திருட்டு வழக்கு ஒன்று உள்ளதும் தெரியவந்தது.ஐசக்கை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE