சித்தாமூர்-மது அருந்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால், கோவில் உண்டியலை உடைத்து திருடிய 'குடி'மகனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.செஞ்சி அருகே அமைந்துள்ள விற்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் முத்து, 62. இவரது மகன் விஜயகுமார் 35. இவர், சித்தாமூர் பகுதியில் தங்கி தினக்கூலியாக கட்டட தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மது அருந்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால், சித்தாமூர் அருகே அமைந்துள்ள நடுபழநி முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்த உண்டியலை உடைத்துள்ளார்.அதிர்ஷ்டவசமாக அன்று காலை உண்டியலில் இருந்த காணிக்கை முழுதும் கோவில் நிர்வாகத்தால் தணிக்கை செய்யப்பட்டதால், வெறும் 80 ரூபாய் மட்டுமே இருந்தது. அதனால் விரக்தி அடைந்த திருடன் உண்டியலையும் சேர்த்து திருடிச் சென்றார்.அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மடக்கி விசாரித்ததில், விஜயகுமார் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, பொதுமக்களை தாக்க முற்பட்டுள்ளார்.இதனால் ஒன்று கூடிய பொதுமக்கள், விஜயகுமாரை 'கும்மி' எடுத்து சித்தாமூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்து மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE