திருத்தணி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

Added : ஜன 20, 2022 | |
Advertisement
திருத்தணி-நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, பூட்டியே இருந்த திருத்தணி எம்.எல்.ஏ., அலுவலகம் நேற்று திறக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.திருத்தணி ம.பொ.சி., சாலையில் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ., வந்து, தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தும், அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.ஆனால்,

திருத்தணி-நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, பூட்டியே இருந்த திருத்தணி எம்.எல்.ஏ., அலுவலகம் நேற்று திறக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.திருத்தணி ம.பொ.சி., சாலையில் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ., வந்து, தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தும், அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.ஆனால், புதியதாக தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று எட்டு மாதங்கள் மேல் ஆகியும், திருத்தணி எம்.எல்.ஏ., தொகுதி அலுவலகத்திற்கு வராமல் பூட்டியே இருந்தது. இதனால் மக்கள் குறைகளை மனுக்களாகவும், அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் சிரமப்பட்டனர்.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, நேற்று, திருத்தணி எம்.எல்,ஏ., சந்திரன், எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு நேரில் வந்து திறந்தார்.பின், பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து, பராமரிப்பு பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.மேலும், இனி வரும் நாட்களில், எம்.எல்.ஏ., அலுவலகம் திறந்து, மக்கள் குறைகள் மனுக்களாக பெறப்படும். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொகுதி மக்களுக்கு கிடைத்திட வழிவகை செய்யப்படும் என, எம்.எல்.ஏ., சந்திரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X