கடலில் மீனவர் தவறி விழுந்து பலி

Added : ஜன 20, 2022 | |
Advertisement
பழவேற்காடு--கடலில் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர், கடலில் தவறி விழுந்து, அலையில் இழுத்து செல்லப்பட்டு இறந்தார்.பழவேற்காடு, திருமலை நகர், மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன், 52. மீனவர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, சக மீனவர்கள் இருவருடன், பைபர் படகில், கடலுக்கு சென்று மீன் பிடித்து, நேற்று அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தார்.முகத்துவாரம் அருகே வரும்போது, அலை

பழவேற்காடு--கடலில் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர், கடலில் தவறி விழுந்து, அலையில் இழுத்து செல்லப்பட்டு இறந்தார்.பழவேற்காடு, திருமலை நகர், மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன், 52. மீனவர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, சக மீனவர்கள் இருவருடன், பைபர் படகில், கடலுக்கு சென்று மீன் பிடித்து, நேற்று அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தார்.முகத்துவாரம் அருகே வரும்போது, அலை அதிகமாக இருந்த நிலையில், அர்ஜுனன் நிலை தடுமாறி, கடலில் விழுந்தார். ராட்ச அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானார்.உடனடியாக திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிராமத்தினர் அங்கு வந்து கடலில் மாயமான அர்ஜுனனை தேடினர்.எட்டு மணி நேரத்திற்கு பின், அர்ஜுனன் உடல் சடலமாக கரை ஒதுங்கியது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X