ஸ்ரீபெரும்புதுார்--படப்பை அருகே, கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி, இரண்டு பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், மணிமங்கலம் அருகே, வரதராஜபுரம் ஊராட்சி பி.டி.சி.,குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், 38, இவரது வீட்டில் 'செப்டிக் டேங்க்' சுத்தம் செய்ய கழிவு நீர் அகற்றும் லாரியை நேற்று வரவழைத்தார்.'செப்டிக்' டேங்கில் ஒரு முறை முயன்ற அளவு சுத்தம் செய்து மறுமுறை மீண்டும் சுத்தம் செய்ய அந்த கழிவு நீர் லாரி சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்தது.அப்போது, மணிமங்கலம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 35; அவரது நண்பர் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஏழுமலை, 36; இருவரும் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியது.இதில், இருவரும் கழிவு நீர் தொட்டியில் மயங்கி விழுந்து அடுத்தடுத்து இறந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கழிவு நீர் தொட்டியில் இறந்த நிலையில் இருந்த இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE