வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு : 'இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கும், 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்' என, நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள், நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன.
![]()
|
இலங்கை மற்றும் இந்தியா இடையே, 1987ல் அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், அப்போது பிரதமராக இருந்த ராஜிவ், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, 'இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கப்படும்.
மேலும் மாகாண கவுன்சில் தேர்தல் நடத்துவது உள்ளிட்டவை உறுதி செய்யும் வகையில், 13வது திருத்தச் சட்டம் நடைமுறைபடுத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது.ஆனால், இதற்கு, இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் சிங்களக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
![]()
|
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையைச் சேர்ந்த தமிழர் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. இலங்கைக்கான இந்தியத் துாதர் கோபால் பாக்லேவைச் சந்தித்து, அக்கடிதத்தை கொடுத்தனர். தமிழ் தேசிய கூட்டணித் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில், தமிழ் எம்.பி.,க்கள் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை வாழ் தமிழர்கள் நலனுக்காக இந்திய தொடர்ந்து ஆதரவு தெரி வித்து, குரல் கொடுத்து வருகிறது. இலங்கை தமிழர்கள் சுயமரியாதை, கண்ணியம், அமைதியுடன் வாழ்வதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.'இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கப்படும்' என, இலங்கை அரசு நீண்ட காலமாக கூறி வருகிறது. அதை நிறைவேற்றும்படி, இலங்கை அரசுக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement