திருவள்ளூர்-திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில், செத்து மிதந்த மீன்களை, கோவில் ஊழியர்கள் அகற்றினர்.திருவள்ளூர் தேரடியில், வீரராகவர் கோவில் பின்புறம், ஹிருதாப நாசினி குளம், 7.5 ஏக்கர் பரப்பில் உள்ளது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும், பக்தர்கள், இக்குளத்தில் நீராடி, தங்களின் நேர்த்திக்கடனை, நிறைவேற்றி வருவது வழக்கம்.முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பின், குளத்தில் கரைத்தும் வழிபட்டு வருவர்.இந்த நிலையில், நேற்று காலை, கோவில் குளத்தில், சில மீன்கள் செத்து மிதந்தன. தகவல் அறிந்ததும், கோவில் தேவஸ்தான ஊழியர்கள் வந்து, குளத்தில் செத்து மிதந்த, 50க்கும் மேற்பட்ட மீன்களை அகற்றினர்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்த போது, செத்து மிதந்த மீன்கள் அனைத்தும், ஏழு ஆண்டுக்கு முன் விடப்பட்டவை. வயதானதால், அந்த மீன்கள் இறந்து விட்டன. உடனடியாக இறந்த மீன்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE