விஷ வாயு தாக்கி இருவர் பலி| Dinamalar

விஷ வாயு தாக்கி இருவர் பலி

Added : ஜன 20, 2022 | |
ஸ்ரீபெரும்புதுார்--படப்பை அருகே, கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி, இரண்டு பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றததுார் தூர் ஒன்றியம், மணிமங்கலம் அருகே, வரதராஜபுரம் ஊராட்சி பி.டி.சி., குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 38. இவரது வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய கழிவு நீர் அகற்றும் லாரியை நேற்று

ஸ்ரீபெரும்புதுார்--படப்பை அருகே, கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி, இரண்டு பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றததுார் தூர் ஒன்றியம், மணிமங்கலம் அருகே, வரதராஜபுரம் ஊராட்சி பி.டி.சி., குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 38. இவரது வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய கழிவு நீர் அகற்றும் லாரியை நேற்று வரவழைத்தார்.'செப்டிக்' டேங்கில் ஒரு முறை முயன்ற அளவு சுத்தம் செய்து, மறுமுறை சுத்தம் செய்ய அந்த கழிவு நீர் லாரி சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மீண்டும் வந்தது.அப்போது, மணிமங்கலம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 35, அவரது நண்பர் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஏழுமலை, 36, இருவரும் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியது.கழிவு நீர் தொட்டியில் மயங்கி விழுந்த இருவரும், அடுத்தடுத்து இறந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கழிவு நீர் தொட்டியில் இறந்த நிலையில் இருந்த இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X