சென்னை--மளிகை பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களிலும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை, பிக் பஜார் துவக்கி உள்ளது. 'சிறந்த நாட்கள் வரும்' என்ற தலைப்பில், எட்டு நாட்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை, பிக் பஜார் துவங்கி உள்ளது. இந்த சிறப்பு விற்பனை, வரும் 26ம் தேதி வரை அமலில் இருக்கும்.ஆன்லைன் வாயிலாகவும், பிக் பஜார் கடைகளில் நேரடியாகவும், தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம். ஆடை, அலங்கார பொருட்களை 2,500 ரூபாய்க்கு வாங்கினால், 2,500 ரூபாய்க்கான 'வவுச்சர்' பரிசாக வழங்கப்படும்.மேலும், எஸ்.பி.ஐ., கார்டு பயன்படுத்தி குறைந்தபட்சம் 3,500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், கூடுதலாக 7.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.டாடா டீ துாள் இரண்டு வாங்கினால், ஒன்று இலவசம்; போர்வைகள், கம்பளிகளில் 50 சதவீதம் தள்ளுபடி; ஆடைகள், காலணிகள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். அத்துடன், ஸ்மார்ட் கை கடிகாரம் 1,999 ரூபாய்க்கு கிடைக்கும் என, பிக்பஜார் நிறுவனம் அறிவித்துள்ளது.பிக் பஜார் நிறுவன தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பவன் சர்தா கூறுகையில்,''ஆன்லைனில் பொருட்கள் வாங்கினால், இரண்டு மணி நேரத்தில் வாடிக்கையாளர்களின் முகவரியில் டெலிவரி செய்யப்படும். ''மளிகை பொருட்கள் முதல் அனைத்து வகையான பொருட்களும், பிக் பஜாரில் குறைந்த விலையில் கிடைக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE