இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை...

Added : ஜன 20, 2022
Advertisement
மறைமலை நகர்-மறைமலை நகர் அருகே, இரு பெண் குழந்தைகளுடன், கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஞானவேல், 44; ஆட்டோ ஓட்டுனர். இவரது முதல் மனைவி இறந்த பின், ஜெயந்தி, 38, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, 5, பூஜா, 3, என இரு பெண் குழந்தைகள்.கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு

மறைமலை நகர்-மறைமலை நகர் அருகே, இரு பெண் குழந்தைகளுடன், கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஞானவேல், 44; ஆட்டோ ஓட்டுனர். இவரது முதல் மனைவி இறந்த பின், ஜெயந்தி, 38, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, 5, பூஜா, 3, என இரு பெண் குழந்தைகள்.கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன் நடந்த சண்டையில், இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற ஞானவேல், வீடு திரும்பவில்லை.கணவர், இரு பெண் குழந்தைகளை காணவில்லை என, எழும்பூர் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் அளித்தார்.இந்நிலையில், மறைமலை நகர் அடுத்த, கடம்பூர் பாழடைந்த விவசாய கிணற்றில், ஞானவேல் மற்றும் இரு பெண் குழந்தைகள் சடலமாக மிதந்தனர்.மறைமலை நகர் போலீசார் கிராம மக்களின் உதவியுடன், சடலத்தை மீட்டு, கரைக்கு எடுத்து வந்தனர். சடலங்களை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கிருந்த ஆட்டோவை காவல் நிலையத்துக்கு ஓட்டிச்சென்ற போலீசார், குடும்ப தகராறு காரணமா அல்லது வேறு காரணங்களுக்காக தற்கொலை நடந்ததா என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X