வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க் : மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு பாக்., அடைக்கலம் அளித்துள்ளதாக, ஐ.நா.,வில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி தலைமையில் சர்வதேச பயங்கரவாத தடுப்பு குழுவின் மாநாடு நடந்தது. இதில் திருமூர்த்தி பேசியதாவது:கடந்த, 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்த பயங்கரவாத கும்பலுக்கு பாக்., தஞ்சமளித்து, பாதுகாப்பு வழங்கியுள்ளது.
அவர்கள் அங்கு சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அல் - குவைதா உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க, ஐ.நா., பல குழுக்களை உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதையும், பயங்கரவாதிகள் பயணம் செய்வதையும், ஆயுதங்கள் வாங்குவதையும் தடுக்கலாம்.

ஆனால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரும் சவாலாகவே உள்ளது. ஐ.நா., அமைத்த குழுக்கள் அனைத்தும், திறம்பட செயலாற்றி, முடிவெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் உள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் பாக்.,கில், அரசு ஆதரவுடன் சொகுசாக வாழ்ந்து வருகிறார். இதை, 2020ல் பாக்., அரசு முதன் முறையாக ஒப்புக் கொண்டது. அவரை மறைமுகமாக குறிப்பிட்டுத் தான் திருமூர்த்தி பேசியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE