தடுப்பூசி சான்று இருந்தால் மட்டுமே ரயில் டிக்கெட்

Added : ஜன 20, 2022
Advertisement
வாலாஜாபாத்-இரண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வழங்கினால் மட்டுமே, பயணியருக்கு ரயில் சீசன் டிக்கெட் மற்றும் சாதாரண டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, 67 கி.மீ., ரயில் வழித்தடம் உள்ளது. இத்தடத்தில் ரெட்டிபாளையம், வில்லியம்பாக்கம், பாலுார், பழையசீவரம், வாலாஜாபாத், நத்தப்பேட்டை, காஞ்சிபுரம் கிழக்கு,

வாலாஜாபாத்-இரண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வழங்கினால் மட்டுமே, பயணியருக்கு ரயில் சீசன் டிக்கெட் மற்றும் சாதாரண டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, 67 கி.மீ., ரயில் வழித்தடம் உள்ளது. இத்தடத்தில் ரெட்டிபாளையம், வில்லியம்பாக்கம், பாலுார், பழையசீவரம், வாலாஜாபாத், நத்தப்பேட்டை, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம், திருமால்பூர், தக்கோலம் ஆகிய ரயில் நிறுத்தங்கள் உள்ளன.தினம், ஆயிரக்கணக்கான பயணியர் தாம்பரம், கிண்டி, தி.நகர், கோட்டை, சென்னை கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கொரோனா தடுப்பூசி போடாமலேயே, பயணியர் ரயிலில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதல் மற்றும் இரண்டாம் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் சமர்ப்பிக்கும் நபர்களுக்கு மட்டும், சீசன் டிக்கெட் மற்றும் பயணியர் டிக்கெட் வழங்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அனைத்து ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களிலும் ஒட்டப்பட்டு உள்ளது.இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களும் தடுப்பூசி செலுத்த முன் வருகின்றனர் என, ரயில்வே துறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X