சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவர் மீது போக்சோ வழக்கு

Added : ஜன 20, 2022
Advertisement
மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் அருகாமை பகுதியில், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்திய முதியவரை போலீசார் தேடுகின்றனர்.திருக்கழுக்குன்றம் அருகாமை கிராம பகுதி தம்பதியின், ஆறு வயது மகள், இரண்டாம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை, பெற்றோர் வெளியே சென்றிருக்க, சிறுமி, சகோதரனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.வீட்டின் அருகில் வசிக்கும், தந்தியப்பன் மகன் பாபு, 50, என்ற

மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் அருகாமை பகுதியில், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்திய முதியவரை போலீசார் தேடுகின்றனர்.திருக்கழுக்குன்றம் அருகாமை கிராம பகுதி தம்பதியின், ஆறு வயது மகள், இரண்டாம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை, பெற்றோர் வெளியே சென்றிருக்க, சிறுமி, சகோதரனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.வீட்டின் அருகில் வசிக்கும், தந்தியப்பன் மகன் பாபு, 50, என்ற காமுகன், பனங்கிழங்கு தருவதாக ஆசைகாட்டி, சிறுமியை தனியே அழைத்துச் சென்று, பாலியல் துன்புறுத்தியுள்ளான்.இதுகுறித்து, பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையைத் தொடர்ந்து, போலீசார், அவர் மீது போக்சோ வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள பாபுவை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X