வரதர் கோவிலில் கலசம் சேதம்

Added : ஜன 20, 2022
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கிழக்கு ராஜகோபுரத்தில் சேதமடைந்த கலசங்களை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்திவரதர் அனந்தரசரஸ் திருக்குளத்தில், சயன நிலையில் வீற்றிருக்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது.உலகப்புகழ் பெற்ற இக்கோவிலில் இரண்டு ராஜகோபுரம் உள்ளது. இதில், மேற்கு ராஜகோபுரம், 96

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கிழக்கு ராஜகோபுரத்தில் சேதமடைந்த கலசங்களை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்திவரதர் அனந்தரசரஸ் திருக்குளத்தில், சயன நிலையில் வீற்றிருக்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது.உலகப்புகழ் பெற்ற இக்கோவிலில் இரண்டு ராஜகோபுரம் உள்ளது. இதில், மேற்கு ராஜகோபுரம், 96 அடி உயரமும், 92.5 அடி அகலமும் உடையது. கோவில் பின்புறமுள்ள கிழக்கு ராஜகோபுரம், 125 அடி உயரமும், 99 அடி அகலமும் உடையது.இதில், கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள, 11 கலசங்களில் இரண்டு சேதமடைந்துள்ளன. சில கலசங்கள் லேசாக சாய்ந்த நிலையில் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டே இந்த கலசங்கள் சேதமடைந்தன.அத்திவரதர் வைபவத்திற்குப்பின், கிழக்கு ராஜகோபுர கலசங்கள் சீரமைக்கப்படும் என, கோவில் உதவி ஆணையர் கூறியிருந்தார். ஆனால், அத்திவரதர் வைபவம் முடிந்து, இரண்டு ஆண்டுகளை கடந்தும், இதுவரை சேதமடைந்த கலசங்கள் சீரமைக்கப்படவில்லை.நடப்பாண்டு, வைகாசி பிரம்மோற்சவத்திற்கு முன்னதாகவே, கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X