செங்கல்பட்டு,-செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவமனை சங்கத்தி-னர், சாலைமறியல் போராட்டத்தில், நேற்று, நடந்தது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஆர்.எம்.ஓ., எனும் நிலைய கண்காணிப்பாளர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின், அனைத்து சங்கங்கள் சார்பில், மேற்கண்ட மருத்துவமனையில், ஆர்.எம்.ஓ., பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலைகள் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவமனை அருகில், ஜி.எஸ்.டி., சாலையில், அனைத்து சங்கத்தினர், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு நகர போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பெண்கள் உட்பட 57 பேரை, கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்கு வந்த கலெக்டர் ராகுல்நாத், 'முதல்வர் கோரிக்கை விடுத்ததால், ஆர்.எம்.ஓ., மாற்றப்பட்டார். வளாகத்தில், சாலை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE