செங்கல்பட்டு--செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால், பரிசோதனைகளும் அதிகமாக எடுக்கப்படுவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்லாவரம், தாம்பரம், வண்டலுார், மறைமலை நகர், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றல் அதிகமாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அரசு மறும் மாவட்ட நிர்வாகம் எடுத்தநடவடிக்கையால், கொரோன தொற்று குறைந்திருந்தது.கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து, கொரோனா வைரஸ் தொற்று, மூன்றாவது அலை பரவ துவங்கி உள்ளது. இதில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 100க்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.தாமதம்கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாளைக்கு, 2,500; ஜனவரி முதல் வாரத்தில், 3,575; இரண்டாவது வாரத்தில், 4,500; நேற்று முன்தினம், 10 ஆயிரத்து 500 பேரும், கொரோனா பரிசோதனைகள் செய்துகொண்டனர்.இந்த பரிசோதனைகளை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.ஆனால், கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்காமல், ஐந்து நாட்களுக்கு பின் கிடைப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பரிசோதனைகளை உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தில், கொரோன தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம், கொரோனா பரிசோதனைகள் அதிகம் எடுத்துவருகிறோம். பரிசோதனைகள் உடனடியாக தெரியபடுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE