தண்ணீர்... தண்ணீர்!தொழில்நுட்ப கல்லுாரியாக இயங்கி வரும், 'ஸ்கூல் ஆப் மைன்ஸ்' கல்லுாரியில், நான்கு வருஷத்துக்கு முன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தினாங்க. இதுவரையில் அதை தெறக்கவே இல்லை.பல லட்சம் ரூபாய் அரசு செலவில் அமைத்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துருப் பிடித்து பாழாகுது. இங்கு படிக்கிற கல்லுாரி மாணவர்களும், ஆசிரியர்களும், ஊழியர்களும் வீட்டில் இருந்து தான் குடிநீர் கொண்டு வர்றாங்க.இங்கு குடிநீருக்கே தடுமாற்றம். கழிப்பறை கதி என்னவாகும். இக்கல்லூரியில் ஆண்கள், மற்றும் பெண்களுக்கு படிக்கிற கல்லுாரியா இருப்பதால் தண்ணீர் கொடுமை கண்ணீர் கொட்டுது!தேசியக்கொடி யார் ஏற்றுவது?தங்கத்தில் குடியரசு தின அரசு விழாவில் போலீஸ் எஸ்.பி., கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு போலீஸ் எஸ்.பி., தங்கவயலுக்கென இல்லை.அதனால் யார் கொடியேற்றுவாங்க. அணிவகுப்பு மரியாதையை யார் ஏற்க போறாங்கன்னு முடிவெடுக்கல. ஏற்கனவே, போலீஸ் எஸ்.பி.,யாக இருந்தவரு. பணியிட மாற்றம் செய்து மூன்று மாதம் ஆகிறது. அந்த எஸ்.பி., நாற்காலி காலியாகவே இருக்குது.எனவே, கோலாரில் இருந்து எஸ்.பி., வருவாரா, அல்லது கூடுதல் கலெக்டர் வந்து கொடியேற்றுவாரா?இந்த சந்தர்ப்பத்திலாவது கோல்டு சிட்டிக்கென போலீஸ் எஸ்.பி.,யை அரசு நியமிப்பாங்களான்னு காக்கிக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.சிக்கலை தீர்க்க வழியே இல்லையா?ரா.பேட்டை மாட்டு வண்டிகள் ஸ்டாண்ட் இருந்த இடத்தில், மாட்டு வண்டிக்கார ஏழைகளுக்கு கடைகள் வழங்க, முனிசி., வணிக வளாகம் ஏற்படுத்த, கட்டடம் தரைத்தளத்தோடு நிற்கிறது. முதல் மாடி கட்டடம் கட்ட திட்டத்தில் இருக்கு. ஆனால், 20 வருஷமா கடைகளும் வழங்கல; கட்டுமான ப்பணிகளை முழுசா முடிக்கவும் இல்லை.இதில் என்ன சட்ட சிக்கல் இருக்குதென தெரியல. இடம் முனிசி.,க்கு தான் சொந்தம். ஆயினும், இதுவும் எம்.ஜி., மார்க்கெட் கதை போல தீர்க்கப்படாமல் இருந்து வருது.நகராட்சி இதன் படி, ஏன் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை என்பதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.வெறும் கட்டடமாக மருத்துவமனை!கொரோனா இரண்டாவது அலையின் போது தங்கச் சுரங்க மருத்துவமனையை புதுப்பிக்க செங்கோட்டை முனி, ஸ்பீட் ஒர்க் காட்டினாரு. தனியார் டொனேஷன்களால் மெத்தை, கட்டில், உபகரணங்கள் வந்து குவிக்க செஞ்சாரு.பூ கட்சியின் செயல் வீரர்கள் தூய்மைப் படுத்தும் வேலையை குறைவில்லாமல் செய்தாங்க. சீரழிந்த மருத்துவமனையை புதுப் பொலிவாக்கினாங்க.ஆனால், இந்த மருத்துவமனைக்கென ஒரே ஒரே மருத்துவரையும் நியமிக்க வில்லை. ஒரே ஒரு மருத்துவ பணியாளரையும் அரசு நியமிக்கவில்லை.கட்டடத்தை மட்டுமே மருத்துவமனையென பெயர் வைத்திருக்காங்க. பழையபடி மருத்துவமனையாக மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களோடு இயங்க எப்போ காலம் வரை போகுதோ?ரெண்டாவது அலையில் காட்டிய அக்கறையை மூன்றாவது அலையில், ஒமைக்ரான் தொற்றின் போது, பூக்கார முனி கண்டுக்கல.தொகுதியின். கைக்கார மேடமும் கவனம் செலுத்தலையே என கோல்டன் சிட்டியில் பரவலாக பேசிக்கிறாங்க!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE