சின்ன சின்னதாய்பள்ளியில் 11 பேருக்கு கொரோனாபங்கார்பேட்டை, மரவள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், மூன்று ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விடுப்பில் சென்று விட்டனர்.கெசரனஹள்ளி கிராம பஞ்சாயத்து தலைவர் மஞ்சுநாத், இதுகுறித்து வட்டார கல்வி அதிகாரிக்கு புகார் செய்தார். நேற்று பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், எட்டு மாணவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது.எனவே, வட்டார கல்வி த்துறை அதிகாரிகள் பள்ளியை மூடினர்.ஆதரவற்றோருக்கு கம்பளி பங்கார்பேட்டை ரோட்டரி கிளப் சார்பில் வீடற்ற, ஆதரவற்ற ஏழைகளுக்கு நேற்று, கம்பளி, போர்வைகள் வழங்கப்பட்டன.பங்கார்பேட்டையில் கடுங்குளிர் தாக்குகிறது. இந்நிலையில் போர்வையின்றி பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் படுத்துள்ளவர்களுக்கு மனிதாபிமானத்துடன் ரோட்டரி சங்கத்தினர் கம்பளி, போர்வைகளை வழங்கினர்.பணியிடமாற்றம்தங்கவயலின் குட்டஹள்ளியில் உள்ள பங்காரு திருப்பதி என்ற வெங்கடரமண சுவாமி கோவிலின் அதிகாரியாக இருந்து வந்தவர் கோவிந்தப்பா. இவர் மீது இந்து அறநிலையத் துறைக்கு பல்வேறு முறைகேடு புகார்கள் ஆதாரத்துடன் சென்றன. இந்நிலையில் அவர், கொண்டராஜனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.கோவில் அர்ச்சகர் ஒருவரை, அலுவலக கழிப்பறையை துப்புரவு செய்ய வைத்ததும் இவர் மீதான புகார்களில் ஒன்று.மீன் பிடிக்க சென்றவர் பலிமாலுாரின் அரலேரி ஏரியில், மீன் பிடிக்க நேற்று கார்த்திக், 19, மஞ்சுநாத், 35, முனிராஜ், 28, ஆகிய மூன்று பேர் சென்றனர். ஏரியில் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மஞ்சுநாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முனிராஜை தேடும் பணியில் தீயணைப்பு படையினர், போலீசார், கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.நோய் தாக்கும் அபாயம்தங்கவயலின் கம்மசந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொம்மாண்ட ஹள்ளி கிராமத்தில், தனியார் கோழிப்பண்ணையின் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிஇருந்தனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் பரவும் ஆபத்தும் இருப்பதாகவும், கோலார் மாவட்ட சுகாதார துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கிராமத்தினர் நேற்று புகார் செய்துள்ளனர்.விபத்தில் ஒருவர் பலிமுல்பாகலின் நாகவாரா கிராமத்தில் இருந்து, நேற்று முல்பாகல் நகருக்கு மோட்டார் பைக்கில் குஷால் 31, என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, சீக்கேஹள்ளி என்ற இடத்தில் வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் குஷால் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து முல்பாகல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அபராதம் வசூல்!சீனிவாசப்பூர், இந்திரா பவன் சதுக்கம் அருகில் போலீசார், மற்றும் சீனிவாசப்பூர் டவுன் சபை அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து, கொரோனா தொற்று தடுப்புக்கான முக கவசம் அணியாமல் நடமாடுவோரை தடுத்து நிறுத்தி நேற்று அபராதம் விதித்தனர்.187 பேருக்கு கொரோனாகோலார் மாவட்டத்தில் 187 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என்றுகோலார் மாவட்ட கல்வி அதிகாரி ரேவண்ண சித்தய்யா, நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ''ஆண்கள் 100, பெண்கள் 87 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது,'' என்றார்.கோலாரில் ஹெல்மெட் கட்டாயம்!கோலாரில் ஏற்படும் விபத்துகளை தடுக்க பிப்ரவரி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்படும் என்று போக்குவரத்து துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னய்யா நேற்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், ''கோலாரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இயங்குகின்றன; அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE