அவதூறு கருத்து பரப்பிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
சென்னை: சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை பரப்பியதாக சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சேகர். இவர் சமீபத்தில் 'பேஸ்புக்' வலைதளத்தில் தன் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.அதில் சேகர் 'தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5௦௦௦
SI, suspended,political post, social media

சென்னை: சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை பரப்பியதாக சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சேகர். இவர் சமீபத்தில் 'பேஸ்புக்' வலைதளத்தில் தன் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.அதில் சேகர் 'தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5௦௦௦ ரூபாய் கொடுக்கச் சொன்னான். வந்தா அதை காணோம். அதை கேளுங்கடா என்றால் பதில் ஏதும் இல்லை. மாறாக வேறு பதில் அளிக்கின்றனர்' என பதிவு செய்திருந்தார்.

தமிழக காவல் துறைக்கும் காவலர்களுக்கும் நன்மை செய்து வரும் அரசு குறித்து காவலர் இப்படி பதிவு செய்வது நியாயமா என ஒருவர் 'பேஸ்புக்'கில் கேள்வி எழுப்பி இருந்தார்.இப்படி அடுத்தடுத்து கேள்வி பரிமாற்றம் நடந்துள்ளது. இதையறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதில் உதவி ஆய்வாளர் சேகர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தது உறுதியானது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.


Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
22-ஜன-202210:10:04 IST Report Abuse
seshadri சங்கர் ஜிவால் ஒரு நல்ல ஜால்ரா. இவர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது விடியல் சென்றி நேரில் பார்த்ததால் அடிமை ஆகி VITTAAR
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-202205:08:11 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் ஏன் தன்னை சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்? குற்றமுள்ள நெஞ்சுபோலும்.
Rate this:
Cancel
Sankaran Natarajan - chennai,இந்தியா
21-ஜன-202210:34:00 IST Report Abuse
Sankaran Natarajan இதில் அவதூறு எங்கே இருக்கிறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X