பள்ளிகளை திறக்க கலெக்டர்களிடம் மனு

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை : அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் நடத்தக்கோரி, தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில், 31ம் தேதி மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்கப்பட உள்ளது.கடந்த 2021 நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடந்தன. பின், அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து, இந்த மாதம் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்தன. ஆனால்,
School, reopen

சென்னை : அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் நடத்தக்கோரி, தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில், 31ம் தேதி மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்கப்பட உள்ளது.

கடந்த 2021 நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடந்தன. பின், அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து, இந்த மாதம் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்தன. ஆனால், கொரோனா பரவல் அதிகமானதால் பள்ளிகளை வரும், 31 வரை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், பள்ளிகளை திறக்கும்படி, தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து, அனைத்து பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 31ம் தேதி மனு அளிக்க உள்ளதாக, தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொது செயலர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
20-ஜன-202212:01:45 IST Report Abuse
K.SANTHANAM தனியார் பள்ளி சங்கத்தின் செயலாளர் அவர்களே, பள்ளி திறக்க அவசரம் காட்டும் நீங்கள் தனியார் பள்ளியில் நடைபெறும் வன்கொடுமை பற்றியும், அப் பள்ளிகள் மீது தங்கள் சங்கம் எடுத்த நடவடிக்கை பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
Vinoth Kumar - Chennai,இந்தியா
20-ஜன-202211:57:10 IST Report Abuse
Vinoth Kumar நல்லதொரு முயற்சி. பள்ளியினை திறப்பதில் எந்த தவறும் இல்லையென்றே தோன்றுகிறது. வருமுன் காப்பது சிறந்ததுதான், அதேவேளை "அஞ்சி அஞ்சி எத்தனை காலம்தான் வாழ்வது". குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி என்பது மிக முக்கியம், அந்தப் பருவத்தில் படிக்கும் படிப்புதான் அடித்தளமாக அமையும். ஒன்று முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளின் நிலைமை கடந்த இரண்டு வருடங்களாக மிக மோசமாகத்தான் உள்ளது. தானாக படிக்கும் பிள்ளைகள் வெகு சிலர் இருப்பார்கள். குழந்தைகளின் கல்விக்கென பெருமளவு நேரம் ஒதுக்கும் பெற்றோரும்,அதற்கான சூழலும் பெரும்பான்மையானவர்களுக்கு கிடைப்பதில்லை. கற்றலின் தரம் பாதிக்க வண்ணம் சில கட்டுப்பாடுகளுடன், பள்ளியினை திறப்பதே அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பது எனது கருத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X