வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி. அன்பழகன் மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள், மருமகள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரிமங்கலம் பகுதியில் மட்டும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.பாலக்கோட்டில் 8 இடங்களிலும் மாரண்டஹள்ளி 5 இடங்களிலும் தர்மபுரியில் 6 இடங்களிலும் பென்னாகரம்.பாளையம்புதூரில் ஒரு இடத்திலும் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

பள்ளியில் சோதனை

முன்னாள் அமைச்சர் அன்பழகன் பினாமி பெயரில் உள்ளதாக கூறப்படும், அரூர் அடுத்த செக்காம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், காலை, 5.00 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.இது போல் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ., கோவிந்த்சாமி வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.
ஆதரவாளர்கள் போராட்டம்

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அவர்களுக்கு சுட சுட உணவு பரிமாறப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE