சண்டிகர்: பஞ்சாப் காங்., முதல்வர் நேர்மையற்றவர் என டில்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து பதிவிட்டுள்ளார்.
![]()
|
பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அங்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்கின் மைத்துனர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஒரே இடத்தில் 10 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
![]()
|
இதனையடுத்து தற்போது இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் ஓர் சாதாரண மனிதர் கிடையாது. அவர் ஓர் நேர்மையற்ற மனிதர் என்று ஹிந்தியில் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக மத்திய பாஜ., அரசு தேர்தலின்போது திட்டமிட்டு அமலாக்கத் துறையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது உறவினர் வீட்டில் சோதனை நடத்த ஏவியுள்ளது என்று சரண் ஜித் சிங் சன்னி கூட்டமொன்றில் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement