இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: கர்ப்பமான பள்ளி மாணவி தற்கொலை; குற்றவாளி போக்சோவில் கைது| Dinamalar

இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': கர்ப்பமான பள்ளி மாணவி தற்கொலை; குற்றவாளி போக்சோவில் கைது

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (2) | |
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவர் மீது போக்சோ வழக்குமாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் அருகாமை பகுதியில், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்திய முதியவரை போலீசார் தேடுகின்றனர்.திருக்கழுக்குன்றம் அருகாமை கிராம பகுதி தம்பதியின், ஆறு வயது மகள், இரண்டாம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை, பெற்றோர் வெளியே சென்றிருக்க, சிறுமி, சகோதரனுடன் வீட்டில் தனியாக
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவர் மீது போக்சோ வழக்குமாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் அருகாமை பகுதியில், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்திய முதியவரை போலீசார் தேடுகின்றனர்.திருக்கழுக்குன்றம் அருகாமை கிராம பகுதி தம்பதியின், ஆறு வயது மகள், இரண்டாம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை, பெற்றோர் வெளியே சென்றிருக்க, சிறுமி, சகோதரனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.latest tamil news
வீட்டின் அருகில் வசிக்கும், தந்தியப்பன் மகன் பாபு, 50, என்ற காமுகன், பனங்கிழங்கு தருவதாக ஆசைகாட்டி, சிறுமியை தனியே அழைத்துச் சென்று, பாலியல் துன்புறுத்தியுள்ளான். இதுகுறித்து, பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையைத் தொடர்ந்து, போலீசார், அவர் மீது போக்சோ வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள பாபுவை தேடுகின்றனர்.மண் சரிந்து விழுந்து இரு பெண்கள் பலிஓசூர் : கிருஷ்ணகிரியில், தேன்கனிக்கோட்டை அருகே, மண் சரிந்து விழுந்து இரு பெண்கள் பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.


latest tamil newsகிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த சாமநத்தத்தை சேர்ந்தவர்கள் லட்சுமி, 26; ராதாம்மா, 28; விமலம்மா, 55; உமா, 23. இவர்கள் நால்வரும் கூலிவேலை செய்து வந்தனர். இவர்கள், சாமநத்தம் - உனிசேநத்தம் வழிப்பாதையிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்திலிருந்து, கோலமாவு கல்லை தோண்டி எடுப்பது வழக்கம்.அதேபோல், நேற்று மதியம் கோலமாவு கல்லை எடுக்க குழி தோண்டினர்.

அப்போது திடீரென மண் சரிந்ததில், நான்கு பேரும் மண் சரிவில் சிக்கி புதைந்தனர்.அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள், விமலம்மா, உமா ஆகியோரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். லட்சுமி மற்றும் ராதாம்மா மண்ணுக்குள் சிக்கி மூச்சுத்திணறி பலியாகினர். தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


ஆட்டோ திருடிய 6 பேர் கைதுlatest tamil news


Advertisement


செங்கல்பட்டு--திருவடிசூலத்தில், ஆட்டோ திருடிய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 37. இவர் தன் ஆட்டோவை வீட்டின் அருகில் நிறுத்தியிருந்தார்.

நேற்று முன்தினம், சத்தம் கேட்டு வெளியே வந்தபோது, ஆட்டோவை ஆறு பேர் உடைய கும்பல் திருடியது தெரியவந்து. இதை தடுக்க முயன்ற அவரை, கத்தியால் வெட்டி தப்பிச்சென்றது.இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னை சைதாப்பேட்டை சசிகுமார், 20, கிண்டி சஞ்சய், 19, மேற்குமாம்பலம் அப்பு என்ற பிரகாஷ், 19, தரமணி விக்னேஷ், 22, ஜாபர்கான்பேட்டை தினேஷ், 23, சிங்கபெருமாள்கோவில் நேதாஜி, 22, ஆகியோரை கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.


கடலில் மீனவர் தவறி விழுந்து பலிபழவேற்காடு--கடலில் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர், கடலில் தவறி விழுந்து, அலையில் இழுத்து செல்லப்பட்டு இறந்தார்.பழவேற்காடு, திருமலை நகர், மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன், 52. மீனவர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, சக மீனவர்கள் இருவருடன், பைபர் படகில், கடலுக்கு சென்று மீன் பிடித்து, நேற்று அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தார்.

முகத்துவாரம் அருகே வரும்போது, அலை அதிகமாக இருந்த நிலையில், அர்ஜுனன் நிலை தடுமாறி, கடலில் விழுந்தார். ராட்ச அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானார்.உடனடியாக திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிராமத்தினர் அங்கு வந்து கடலில் மாயமான அர்ஜுனனை தேடினர்.எட்டு மணி நேரத்திற்கு பின், அர்ஜுனன் உடல் சடலமாக கரை ஒதுங்கியது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலைமறைமலை நகர்-மறைமலை நகர் அருகே, இரு பெண் குழந்தைகளுடன், கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஞானவேல், 44. ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். அதன் பின், இவர், ஜெயந்தி, 38, என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


latest tamil newsஇவர்களுக்கு ஐஸ்வர்யா 5, பூஜா 3, என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததுள்ளது. சில தினங்களுக்கு முன்னரும் சண்டை ஏற்படவே தன் இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற ஞானவேல் பின் வீடு திரும்பவில்லை. இதனால் கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளை காணவில்லை என்று ஜெயந்தி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே, மறைமலை நகர் அடுத்த, கடம்பூர் பாழடைந்த விவசாய கிணற்றில் ஒரு ஆண் சடலம் மற்றும் இரு பெண் குழந்தைகள் சடலம் மிதப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.மறைமலை நகர் போலீசார் கிராம மக்களின் உதவியுடன், சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். பின், உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வந்த ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். தற்கொலைக்கு குடும்ப தகராறு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணங்களாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமியுடன் திருமணம்: வாலிபருக்கு 'போக்சோ'திருவொற்றியூர்--சென்னை, எண்ணுார், சுனாமி குடியிருப்பு, 81வது பிளாக்கைச் சேர்ந்தவர் ஆண்டனி, 19.இவருக்கு, தாங்கல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.


latest tamil newsபின்னர், அந்த சிறுமியை இவர் ஆசை வார்த்தை கூறி, காதலிக்க ஆரம்பித்தார். கடந்த 17ம் தேதி சிறுமி காணாமல் போனார்.இது குறித்து, திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில், ஆண்டனி, அந்த சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் ஆண்டனியிடம் இருந்து சிறுமியை மீட்டனர். வீட்டிலேயே வைத்து, தாயின் முன் ஆண்டனி சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, ஆண்டனியை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கடன் வாங்கிய பெண் தர மறுப்பு: பிளம்பர் தற்கொலைதிருவொற்றியூர்--திருவொற்றியூரில், வாங்கிய கடனை பெண் தர மறுத்ததால், பிளம்பர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, திருவொற்றியூர், ஏ.ஆர்.ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபு, 36; பிளம்பர். கடந்த 2016ல், பிரேமா என்பவரை திருமணம் முடித்தார்.

இரு ஆண்டுகளில், விவாகரத்து பெற்றார்.கடந்த 5 ஆண்டுகளாக, எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரிடம் பழகி வந்துள்ளார். அவருக்கு, 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தைக் கொடுக்க, அப்பெண் மறுத்துள்ளார். மனமுடைந்த பிரபு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.கர்ப்பமான பள்ளி மாணவி தற்கொலை; குற்றவாளி போக்சோவில் கைதுlatest tamil newsதிருவண்ணாமலை:திருவண்ணாமலையில், கர்ப்பமான சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் ஆகியோரும் கைதாகினர்.

திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயது சிறுமி, சென்னை கோவளத்தில் உள்ள பழங்குடியினர் உறைவிட பள்ளியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது, வீட்டின் அருகே உள்ள கார் டிரைவர் அரிபிரசாத்துடன், 37, பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகியதில், சிறுமி கர்ப்பமானார்.

இதனால் கடந்த 7ல், சிறுமி விஷம் குடித்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மகளிர் போலீசார் விசாரித்து, அரிபிரசாத்தை நேற்று முன்தினம் போக்சோவில் கைது செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து மாணவி படித்த சென்னை உறைவிட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், மாணவி கர்ப்பமாக இருந்த விஷயம் விடுதி வார்டன் செண்பகவள்ளி, 35, மற்றும் தலைமை ஆசிரியர் குமரகுருபரன், 51, ஆகியோருக்கு ஏற்கனவே தெரிந்தும், அவர்கள் பெற்றோரிடம் அதை மறைத்துள்ளதும் தெரிய வந்தது. சிறுமி கர்ப்பமாக இருந்த விஷயம் குறித்து போலீசாருக்கோ, குழந்தைகள் ஆணையத்துக்கோ தகவல் தெரிவிக்காத தலைமை ஆசிரியர், வார்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அக்காவை கொல்ல முயன்ற 'பாசக்கார' தம்பிக்கு வலைஆவடி : ஆவடி அருகே அக்காவை கொலை செய்ய முயன்ற 'பாசக்கார' தம்பியை, போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடி, பருத்திப்பட்டில் 'ஹேப்பி நெஸ்ட்' அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் ஆயிஷா, 37. இவர் கணவரை பிரிந்து, 3 குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்.

இவரது தம்பி ரியாஸ், 34, என்பவர் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர். ஆயிஷா, தன் தம்பிக்கு 1.5 லட்சம் ரூபாய் செலவில், ஓர் ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.அதன் ஆர்.சி., புத்தகத்தை தன்னிடம் வைத்திருந்து, ஆட்டோவிற்கு நிலுவைத் தொகை செலுத்தி முடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரியாஸ், 'நிலுவை தொகை செலுத்த நான் தான் பணம் கொடுத்தேன். என்னிடம், ஆட்டோவின் ஆர்.சி., புக்கை கொடு' எனக், கேட்டுள்ளார்.ஆனால், ஆர்.சி., புக்கை 1 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து இருப்பதாக ஆயிஷா தெரிவித்ததையடுத்து, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ரியாஸ், ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, தன் அக்காவின் கழுத்து, முகத்தில் தாக்கி தப்பினார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்து உள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், ஆவடி போலீசார், அக்காவை கொலை செய்ய முயன்ற தம்பியை தேடி வருகின்றனர்.


பெண்ணிடம் சில்மிஷம் வாலிபர் கைதுவிருத்தாசலம்-விருத்தாசலம் அருகே இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த எம்.அகரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரகு, 20. இவர், நேற்று முன்தினம் 30 வயது இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்ததுடன், அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், மங்கம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ரகுவை கைது செய்தனர்.
திருடனை பிடிக்க முயன்றவர் மீது தாக்குதல்புதுச்சேரி,-நைனார்மண்டபம் திவான் கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன், 41. நேற்று முன்தினம் அதிகாலை 5.௦௦ மணியளவில், இவரது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தை பைக்கை ஒருவர் திருட முயன்றார்.


latest tamil news


அவரை பிடிக்க முயன்ற ஜெயகிருஷ்ணன் மீது, மர்ம நபர் கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் தப்பிச் சென்றார்.புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவர்களை திட்டிய தலைமையாசிரியை கைதுதிருப்பூர்:திருப்பூரில், மாணவர்களை ஜாதி பெயர் சொல்லி திட்டிய விவகாரம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமையாசிரியை கைது செய்யப்பட்டார்.

திருப்பூர், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கீதா, 45. கடந்த ஆண்டு டிச., 17ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தை, மாணவர்களை சுத்தம் செய்ய சொன்னதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், தலைமையாசிரியை மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, அவரை, முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், 'சஸ்பெண்ட்' செய்தார். ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார், 35, அளித்த புகாரையடுத்து, தலைமையாசிரியை கீதா மீது மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

முன்ஜாமின்கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், கீதா மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற அறிவுரைப்படி, இதுதொடர்பான மனுவை, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் விசாரித்தார். அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து, தலைமையாசிரியை கீதாவை, மங்கலம் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X