ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்
ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் அரைக்கப்பட்டு, அந்த அரிசி மாவட்டம் முழுவதும் உள்ள 424 ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தரமான ரேஷன் அரிசி வழங்கக்கோரி பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமாரிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றிரவு சித்தமல்லி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இன்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
20-ஜன-202219:27:50 IST Report Abuse
M  Ramachandran ரோட்டில் கொட்டுவதென்பது உணவு பொருளாய் வீணாக்குவது இது ஞ்சாயமற்ற செயல்..வேறு முறையில் போராடலாம்.
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
20-ஜன-202218:26:51 IST Report Abuse
Thirumal Kumaresan எதை கொடுத்தாலும் ரோடில் கொட்டி போராடடம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.எதிப்பை வேறு வழியில் காட்டுங்கள்.நிறைய நாட்டில் அது கூட கிடைக்காமல் கஷட படுகிறார்கள்.உங்கள் நூதன போராட்த்தை எப்படி காடடக்கூடாது.வேறுவலியை பாருங்கள்.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
20-ஜன-202217:08:08 IST Report Abuse
R S BALA ரேஷன் முறை என்ற ஒன்று துவங்கிய காலத்திலிருந்தே ரேஷன் அரிசி இப்படித்தான இருக்கு, ரேஷன் பொருள்களின் நிறம் மணம் சுவை இவற்றை கண்ணை காட்டிக்கொண்டே சொல்லிவிடலாம் எவ்வளவு மட்டமான தரமென்று , மிக அரிதாக எப்போதாவது ஒரு நல்ல மூட்டை தவறுதலாக தனியாருக்கு போகவேண்டியது மாறி வந்தால் உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X