வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: 'உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. விரைவில் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க, மாநில தேர்தல் ஆணையருக்கு, கோவையில் இருந்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
தேர்தலில் ஜனநாயக முறைப்படி ஓட்டளிக்கும் சூழ்நிலையை உருவாக்குவது, தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை. பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும், ஜனநாயக படுகொலை பல தேர்தல்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை தடுக்க, தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுப்பதில்லை.உள்ளாட்சி தேர்தலுக்கும், ஓட்டுக்கு பணம் கொடுக்க வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியை, பலர் துவங்கி விட்டதாக அறிகிறோம். அதை தடுத்து நிறுத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.'ஓட்டுக்கு பணம் கொடுத்தால், தேர்தல் நிறுத்தி வைக்கப்படும்.பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படும். சமூக ஊடகங்கள் வழியாக, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சம்பவத்தை மக்கள் அனுப்பலாம்' என்பது போன்ற அறிவிப்புகளை, தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.இவ்வாறு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என, தற்போதைய தமிழக முதல்வரும் பலமுறை தெரிவித்திருக்கிறார். அதை அமல்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, ஈஸ்வரன் கூறியுள்ளார்.
'ஓட்டுக்கு பணம் கொடுத்தால், தேர்தல் நிறுத்தி வைக்கப்படும். பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படும். சமூக ஊடகங்கள் வழியாக, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சம்பவத்தை மக்கள் அனுப்பலாம்' என்பது போன்ற அறிவிப்புகளை, தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE