எடப்பாடி: பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலுக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கிய தி.மு.க., அரசு, ரூ.500 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக அரசு தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்து 21 பொருட்கள் வழங்கியுள்ளனர். அதில் அனைத்தும் தரமற்ற பொருளாக இருந்தது .ஒரு சில இடங்களில் 15 பொருட்கள் 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. பொருட்கள் எடை குறைவாகவும் இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலுக்கு திமுக அரசு 1300 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் சுமார் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

கரும்பு கொள்முதல் செய்தலில் ஊழல், ஒரு கரும்பின் விலை அரசு ரூ 33 என விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு 16 ரூபாய் மட்டும் வழங்கினர். இதில் கரும்புக்கு ரூ 17 ஊழல் நடந்துள்ளது. மொத்தமாக ரூ 34 கோடி ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE