வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: திருப்பூரில் தொற்று பரவலுடன், டெங்குவும் சேர்ந்து 'மிரட்டுகிறது'. டெங்கு, கொரோனா பரவல் தடுப்பு பணிகளில், மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தற்போது கொரோனா தொற்று பரவலுடன் டெங்கு காய்ச்சலும் உடன் சேர்ந்து பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.

* திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கடந்த 2 மாதமாகவே டெங்கு பரவல் அதிகளவில் உள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி, கொசு மருந்து தெளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர தினமும் மண்டல வாரியாக தலா நான்கு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது.
* கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில், சுகாதார பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து கண்காணிக்கப்படுகிறது.
நான்கு மண்டலங்களிலும் தலா ஒரு நோய் கண்டறியும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மருத்துவர் குழு செயல்படுகிறது.கொரோனா பரிசோதனைக்கு மாதிரியும் சேகரிக்கப்படுகிறது. இது தவிர நடமாடும் வாகனம் மூலம் பகுதி வாரியாக மாதிரி சேகரிப்பு நடைபெறுகிறது.மாதிரி சேகரிப்பு அதிகரிக்க திட்டம்சுகாதார பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

தற்போது பொங்கல் தொடர் விடுமுறையாக உள்ள நிலையில் மாதிரி சேகரிப்பு தினமும் 600 முதல் 800 வரை மட்டுமே உள்ளது. தற்போது பெரும்பாலானோர் திருப்பூர் திரும்பி வரும் நிலையில், மாதிரி சேகரிப்பு அதிகரிக்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி மாவட்ட அளவிலான மொத்த தொற்று பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு மாநகராட்சி பகுதியில் என்ற நிலை உள்ளது.தொற்று பரவல் அதிகரித்து நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், சிகிச்சை அளிக்க ஏதுவாக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.
தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மாநகராட்சியின் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE