முலாயம் சிங் உறவினர், பிரியங்கா பிரசாரத்தை முன்னெடுத்த காங்., நிர்வாகி பா.ஜ.,வில் இணைந்தனர்| Dinamalar

முலாயம் சிங் உறவினர், பிரியங்கா பிரசாரத்தை முன்னெடுத்த காங்., நிர்வாகி பா.ஜ.,வில் இணைந்தனர்

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (10) | |
லக்னோ: காங்கிரஸ் சார்பில் ‛ நான் ஒரு சிறுமி என்னால் போராட முடியும்' என்ற கோஷத்தை முன்னெடுத்து உ.பி., முழுவதும் பரப்பிய காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா மவுரியா மற்றும் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மைத்துனருமான பிரமோத் குப்தா ஆகியோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.உ.பி.,யில் காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவால் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‛நான் சிறுமி,என்னாலும்
BJP, Bharatiya Janata Party, Congress, Mulayam Singh Yadav, காங்கிரஸ், பா.ஜ, முலாயம், முலாயம் சிங் யாதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: காங்கிரஸ் சார்பில் ‛ நான் ஒரு சிறுமி என்னால் போராட முடியும்' என்ற கோஷத்தை முன்னெடுத்து உ.பி., முழுவதும் பரப்பிய காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா மவுரியா மற்றும் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மைத்துனருமான பிரமோத் குப்தா ஆகியோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.


latest tamil news


உ.பி.,யில் காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவால் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‛நான் சிறுமி,என்னாலும் போராட முடியும்' என்ற கோஷத்தை மாநிலம் முழுவதும் பிரபலப்படுத்தியதால் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா மவுரியா. ஆனால், இவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த பிரியங்கா மவுரியா இன்று(ஜன.,20) லக்னோவில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு வந்து முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்.

அதேபோல், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மைத்துனரும் அக்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பிரமோத் குப்தாவும் பா.ஜ.,வில் இணைந்தார்.


latest tamil newsஇது தொடர்பாக பிரமோத் குப்தா கூறுகையில், சமாஜ்வாதியில் முலாயம் சிங்கின் நிலை மோசமாக உள்ளது. அவரை அகிலேஷ் சிறை வைத்துள்ளார். கிரிமினல்கள் மற்றும் சூதாட்டக்காரர்கள் சமாஜ்வாதியில் இணைந்து வருகின்றனர் எனக்கூறினார்.
முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவும் நேற்று பா.ஜ.,வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X