வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கோவாவில் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் ஆம் ஆத்மியில் இணைந்து போட்டியிட முன் வரவேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கோவா சட்டசபைக்கு பிப்.,14 தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிடும் பா.ஜ.,வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டியிட்ட பன்ஜிம் தொகுதியில், அவரது மகன் உத்பல் பாரிக்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தற்போதைய எம்.எல்.ஏ.,வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வேறு தொகுதியில் போட்டியிடுவது குறித்து உத்பலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பா.ஜ.,வின் கொள்கையை பார்த்து கோவா மக்கள் வருத்தமடைந்துள்ளனர். மனோகர் பாரிக்கர் மீது எப்போதும் மதிப்பு வைத்துள்ளேன். ஆம் ஆத்மியில் இணைந்து தேர்தலில் போட்டியிட உத்பல் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE