இந்தியாவின் பெயரை கெடுக்க முயற்சி: பிரதமர் மோடி

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: தவறான தகவல்களை பரப்பி வெளிநாடுகளில், இந்தியாவின் பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.சுதந்திரத்தின் 75வது ஆண்டு பொன்விழாவில் இருந்து பொன் இந்தியாவை நோக்கி என்ற விழாவை வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று நாம் பாகுபாடுகளுக்கு இடமில்லாத ஒரு அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது. சமத்துவம்
pmmodi, narendramodi, modi, india,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தவறான தகவல்களை பரப்பி வெளிநாடுகளில், இந்தியாவின் பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சுதந்திரத்தின் 75வது ஆண்டு பொன்விழாவில் இருந்து பொன் இந்தியாவை நோக்கி என்ற விழாவை வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று நாம் பாகுபாடுகளுக்கு இடமில்லாத ஒரு அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அடித்தளத்திற்கு உறுதியாக இருக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி உள்ளோம். சிந்தனை, புதுமையான அணுகுமுறை முற்போக்கான முடிவுகள் கொண்ட இந்தியா உருவாவதை நாம் காண்கிறோம்.

நமது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில் உள்ளது. தேசம் நம்மிடம் இருக்கிறது. தேசத்தில் நாம் இருக்கிறோம். இந்த உணர்வுதான் புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்தியர்களின் மிகப்பெரிய பலமாக உள்ளது.

நமது ஆன்மிகம், பன்முகதன்மை ஆகியவை பாதுகாக்கப்பட தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு,கல்வி, சுகாதாரம் ஆகியவை தொடர்ந்து நவீனமயமாக்கப்பட வேண்டும்.கடந்த 75 ஆண்டுகளில் உரிமைகள், உரிமைகளுக்காக போராடுவது, நேரத்தை வீணடிப்பது என்ற மட்டும் பேசினோம். ஒருவரின் கடமைகளை முழுவதுமாக மறப்பது இந்தியாவை பலவீனமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

தவறான தகவல்களை பரப்பி, வெளிநாடுகளில் இந்தியாவின் பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. இதனை வெறும் அரசியல் என ஒதுக்கிவிட்டு செல்ல முடியாது. இது அரசியல் அல்ல. இது நமது நாட்டின் கேள்வி. இந்தியாவை முழுமையாக உலக நாடுகள் தெரிந்து கொள்ள வைத்திருப்பது நமது கடமை. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


latest tamil newsபிரம்ம குமாரிகளின் 7 திட்டங்களையும் துவக்கி வைத்து பிரதமர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் பொன் இந்தியாவிற்கான உணர்வு, ஆன்மிக பயிற்சி, நாட்டிற்கு உத்வேகம் உள்ளது. பிரம்ம குமாரிகளின் முயற்சியும் உள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் மனதிலும் கடமை என்ற விளக்கை ஏற்ற வேண்டும். கடமை என்ற பாதையில் பயணித்து நாட்டை முன்னேற்றுவோம். இதன் மூலம் சமூகத்தில் உள்ள தீமைகள் விலகுவதுடன், தேசம் புதிய உயரத்தை அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
21-ஜன-202209:05:46 IST Report Abuse
Tamilan ....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஜன-202205:41:06 IST Report Abuse
Kasimani Baskaran அடப்பாவமே... அப்படியென்றால் தீம்க்காவின் சமூக நீதியில் தீவைத்து விட்டார்களா....
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
21-ஜன-202204:31:49 IST Report Abuse
RandharGuy குழந்தைகளாலும்கூட விமர்சிக்கப்படுமளவுக்கு பிரதமரின் செயல்பாடுகள் இருக்கின்ற பட்சத்தில் அவர்தான் தனது கொள்கைகளையும் நடைமுறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டுமேயல்லாது விமர்சிப்பவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டியதில்லை. ஆனால் பாஜக இந்தச் சிறார் நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை கோரி ஜனநாயகத்திற்கு விரோதமான தனது உண்மைமுகத்தை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது.
Rate this:
பேசும் தமிழன்இதே போன்ற சிறார் நிகழ்ச்சிகளை யார் வேண்டுமானலும் நடத்தலாம்...நாட்டை கேவல படுத்த இதன் பின்னணியில் இருக்கும் கும்பலின் உண்மை முகம் வெளி கொண்டு வரப்பட வேண்டும்....யார் இதே போன்ற சிறார் நிகழ்ச்சி நடத்தி.. விடியல் தலைவரை குறை சொல்ல வைக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X