கேமரா பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டம் கண்காணிப்பு| Dinamalar

கேமரா பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டம் கண்காணிப்பு

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (3) | |
குடியாத்தம் : குடியாத்தம் அருகே, கேமரா பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.ஆந்திரா மாநிலம், குப்பம், வனப்பகுதியில் இருந்து 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், வேலுார் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுழைந்தது. துருகம், கல்லப்பாடி, மோர்த்தானா பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை கொன்று தின்று வருகிறது.

குடியாத்தம் : குடியாத்தம் அருகே, கேமரா பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம், குப்பம், வனப்பகுதியில் இருந்து 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், வேலுார் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுழைந்தது. துருகம், கல்லப்பாடி, மோர்த்தானா பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை கொன்று தின்று வருகிறது. ஏராளமான ஆடுகளை சிறுத்தைகள் துாக்கிச் சென்றதால், மக்கள் அச்சமடைந்தனர். குடியாத்தம் வனத்துறையினர், கால்தடத்தை ஆய்வு செய்து நடமாட்டத்தை கண்காணித்த போதிலும் சிறுத்தைகளை பிடிக்க முடியவில்லை.
எனவே, சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கேமராக்களை இன்று பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X