அண்ணன் மகனை அடித்து கொன்ற 2 சித்தப்பாக்கள் கைது

Added : ஜன 20, 2022 | |
Advertisement
அரூர் அருகே, பணம் கொடுக்கல், வாங்கலில் அண்ணன் மகனை அடித்து கொன்ற, 2 சித்தப்பாக்களை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் செல்லக்கண்ணன், 37, இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன், நிலத்தை விற்ற பணத்தில், அதே பகுதியை சேர்ந்த தனது சித்தப்பா முருகேசன், 52, என்பவருக்கு, 1.50 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இதனை செல்லக்கண்ணன் திருப்பி கேட்ட

அரூர் அருகே, பணம் கொடுக்கல், வாங்கலில் அண்ணன் மகனை அடித்து கொன்ற, 2 சித்தப்பாக்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் செல்லக்கண்ணன், 37, இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன், நிலத்தை விற்ற பணத்தில், அதே பகுதியை சேர்ந்த தனது சித்தப்பா முருகேசன், 52, என்பவருக்கு, 1.50 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இதனை செல்லக்கண்ணன் திருப்பி கேட்ட போது, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என முருகேசன் திருப்பி கொடுத்து வந்துள்ளார். நேற்று மாலை, 4:00 மணிக்கு செல்லக்கண்ணன், முருகேசனிடம் பணம் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு, 8:00 மணிக்கு, மேல்மாடியில் செல்லக்கண்ணன் இருந்துள்ளார். அங்கு சென்ற முருகேசனும் அவரது தம்பி சிவக்குமார், 45, ஆகிய இருவரும் கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், செல்லக்கண்ணன் கதவை திறக்கவில்லை. இதையடுத்து, இரும்பு ராடால் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்ற முருகேசன், சிவக்குமார் ஆகிய, இருவரும் செல்லக்கண்ணணை இரும்பு ராடால் அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செல்லக்கண்ணன் தம்பி செல்வம், 36, புகாரின்படி, முருகேசன், சிவக்குமார் இருவரையும் அரூர் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட செல்லக்கண்ணனுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X