இதே நாளில் அன்று

Added : ஜன 20, 2022
Advertisement
ஜன., 21, 2019கர்நாடக மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் உள்ள வீரபுரா கிராமத்தில், 1907 ஏப்., 1ம் தேதி பிறந்தவர், சிவக்குமார சுவாமி; இயற்பெயர் சிவண்ணா. தும்கூரு நகரில் செயல்படும் சித்த கங்கா மடத்தின் தலைவரும், வீர சைவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவராகவும் செயல்பட்டார்.'சித்தகங்கா கல்வி அறக்கட்டளை' மூலம் மாநிலம் முழுதும், 125 கல்வி நிலையங்களை நடத்தி வந்தார். இங்கு, ஏழை மாணவ -

இதே நாளில் அன்று


ஜன., 21, 2019



கர்நாடக மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் உள்ள வீரபுரா கிராமத்தில், 1907 ஏப்., 1ம் தேதி பிறந்தவர், சிவக்குமார சுவாமி; இயற்பெயர் சிவண்ணா. தும்கூரு நகரில் செயல்படும் சித்த கங்கா மடத்தின் தலைவரும், வீர சைவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவராகவும் செயல்பட்டார்.'சித்தகங்கா கல்வி அறக்கட்டளை' மூலம் மாநிலம் முழுதும், 125 கல்வி நிலையங்களை நடத்தி வந்தார். இங்கு, ஏழை மாணவ - மாணவியருக்கு இலவசமாக கல்வி, உணவு, தங்கும் விடுதி என வழங்கப்பட்டு வருகிறது. இவரது சீடர்கள் இவரை, 'நடமாடும் கடவுள்' என்று அழைத்து வந்தனர்.
'பத்ம பூஷன், கர்நாடகா ரத்னா' உட்பட பல்வேறு விருதுகள் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 111 ஆண்டுகள் 295 நாட்கள் உயிர் வாழ்ந்தவர் என்ற பெருமை பெற்றார். 2019 ஜன., 21 தேதி தன், 111வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.சிவக்குமார சுவாமி காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X