சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'பூஸ்டர்' ஊசி போட்டால் மிக நல்லது!

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (3)
Advertisement
அவசர சிகிச்சை மருத்துவர் ஹரி பிரசாத்: 'ஒமைக்ரான்' வைரஸ் அதன் முந்தைய மாறுபட்ட வைரஸ்களை காட்டிலும், மிகவும் வேகமாக தொற்றக் கூடியதாக உள்ளது. நோய் தொற்றின் தாக்கம் காரணமாக, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், மருத்துவமனைகளை இது திணறடிக்கும். உலகம் முழுதும் மிக குறைந்த அளவே மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஐ.சி.யூ., சிகிச்சை தேவைப்பட்டதாக கூறப்பட்ட
சொல்கிறார்கள்

அவசர சிகிச்சை மருத்துவர் ஹரி பிரசாத்: 'ஒமைக்ரான்' வைரஸ் அதன் முந்தைய மாறுபட்ட வைரஸ்களை காட்டிலும், மிகவும் வேகமாக தொற்றக் கூடியதாக உள்ளது. நோய் தொற்றின் தாக்கம் காரணமாக, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், மருத்துவமனைகளை இது திணறடிக்கும். உலகம் முழுதும் மிக குறைந்த அளவே மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஐ.சி.யூ., சிகிச்சை தேவைப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு, இறப்புகளும் நேர்ந்துள்ளதாக பதிவாகிஉள்ளது.அறிகுறிகள் உருவாகி, ஒருவர் பரிசோதனை மேற்கொள்ளாத போது, டெல்டாவையும், ஒமைக்ரானையும் வேறுபடுத்தி அறிவது, நடைமுறையில் சாத்தியமற்றது. இரண்டாவது அலையின்போது பயங்கரமான அனுபவம் ஏற்பட்டதால், அறிகுறி உள்ள எவரும் பரிசோதிக்காமல் இருப்பதும், டெல்டா தொற்று ஏற்படுவதை புறக்கணிப்பதும் சரியானதல்ல.
உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நோய் தொற்று காரணமாக தடுப்பூசி செலுத்தாதவரை காட்டிலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் குறைவாகவே பாதிப்புக்குள்ளாகின்றனர் என தெரிய வந்து உள்ளது.இதோடு கூடுதலாக, 'பூஸ்டர் டோசும்' எடுத்துக் கொள்ளும் போது, அது கூடுதல் செயல் திறனோடு செயல்படுவதாக தெரிய வந்து உள்ளது.நாம் ஒவ்வொருவரும் நமக்கு பெருந்தொற்று உள்ளது என்றும், அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், பிடிக்கிறதோ, இல்லையோ... ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.பெருந்தொற்றை முறியடிப்பதற்காக, நாம் திரும்ப திரும்ப செய்ய வேண்டிய பணிகள்...
* முக கவசங்கள் முறையாக பயன்படுத்துதல்.
* நெரிசலான இடங்களை தவிர்த்தல் மூடப்பட்ட அறைகளுக்கு பதிலாக நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் நேரத்தை செலவிடுதல்.
* சமூக இடைவெளியை பின்பற்றுதல்.
* ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுதல்.
* வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து சரியான தகவல்களும், உங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவதன் வாயிலாக, மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படலாம் என கணிக்கப்படுவதால், இது மிகவும் முக்கியமானது.இரண்டு தடுப்பூசி போட்டவர்கள், தவறாமல் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுங்கள்!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
21-ஜன-202218:21:25 IST Report Abuse
raghavan என்னமோ செய்யுங்க..இதெல்லாம் எப்போ அடங்குமோ தெரியல.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-ஜன-202210:41:21 IST Report Abuse
Sampath Kumar இவரை பார்த்தாலே..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜன-202209:48:43 IST Report Abuse
Lion Drsekar உண்மையை கூறவேண்டுமானால் இந்திய பாரம்பரிய மருந்துகளை எடுத்துக்கொண்டு பல ஆயிரம் பாதிக்கபப்ட்டவர்கள் விளம்பரம் இல்லமால் நிம்மதியாக வாழ்கின்றனர். அழகான மருத்துவரை முன்னாள் பிரதமர்போல் ஏதோ ஒரு நிலையில் இருக்கும் நேரத்தில் எடுத்த புகைப்படத்தை போட்டு கட்டாய தடுப்பூசி போடவேண்டும் என்று மிரட்டுவது போல் இருக்கிறது, முதலில் மக்களை ஆட்க்கொண்ட கிருமி மிகக்கொடியது, அதையே இந்திய பாரம்பரிய மருத்துவம் வெற்றிகரமாக செயல்பட்டு மக்களைக்காப்பாற்றியது. பயனாளிகளுக்கு மட்டுமே தெரியும். இன்றும் பல முக்கிய பிரமுகர்கள் ஒரு தரப்பிருக்காக ஒரு மருத்துவமும் தங்களுக்காக இந்திய பாரம்பரிய மருத்துவமும் எடுத்து வருவதைக் காணலாம், விபத்து, அவசரம், அறுவைசிகிச்சைக்கு ஆங்கில மருத்துவதைத்தவிர வேறு எதுவுமே கைகொடுக்காது வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X