நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்| Dinamalar

நடிகர் சித்தார்த்துக்கு 'சம்மன்'

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (11) | |
சென்னை, :'பாட்மின்டன்' வீராங்கனை சாய்னா நேவல் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக, நடிகர் சித்தார்த்துக்கு, சென்னை போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' சாய்னா நேவல் கருத்து வெளியிட்டார்.இவருக்கு பதில் அளித்த நடிகர்
 நடிகர் சித்தார்த்துக்கு 'சம்மன்'

சென்னை, :'பாட்மின்டன்' வீராங்கனை சாய்னா நேவல் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக, நடிகர் சித்தார்த்துக்கு, சென்னை போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' சாய்னா நேவல் கருத்து வெளியிட்டார்.

இவருக்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், 42, அநாகரிகமாக விமர்சனம் செய்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேசிய மகளிர் கமிஷன், தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, சித்தார்த்துக்கு 'சம்மன்' அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, சாய்னா நேவலிடம் சித்தார்த் மன்னிப்பு கோரினார். அதை சாய்னா நேவலும் ஏற்றுக் கொண்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X