புதுடில்லி: உலகளவில் பிரபலமான தலைவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் செல்வாக்கு , புகழ் தொடர்பாக ‛தி மார்னிங் கன்சல்ட்' அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிரதமர் மோடி பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை, 71 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர்.
கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த ஆய்வில் பிரதமர் மோடி தேர்வானார். மோடியை 70 சதவீத பேர் ஆதரித்தனர். இந்தாண்டும் மோடி 71 சதவீதம் ஆதரவு பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
![]()
|
விவரம்:
பிரதமர் நரேந்திர மோடி : 71 %
மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ் : 66 %
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் : 46 %
பிரேசில் அதிபர் போல்ஸ்சோனோரோ : 37 %
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்: 26 %
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE