உலகளவில் பிரபலமான தலைவர்கள்: முதலிடத்தில் பிரதமர் மோடி| Dinamalar

உலகளவில் பிரபலமான தலைவர்கள்: முதலிடத்தில் பிரதமர் மோடி

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (32) | |
புதுடில்லி: உலகளவில் பிரபலமான தலைவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் செல்வாக்கு , புகழ் தொடர்பாக ‛தி மார்னிங் கன்சல்ட்' அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிரதமர் மோடி பிரபலமான தலைவராக தேர்வாகி
Modi, PM Modi, Narendra Modi, மோடி

புதுடில்லி: உலகளவில் பிரபலமான தலைவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.


உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் செல்வாக்கு , புகழ் தொடர்பாக ‛தி மார்னிங் கன்சல்ட்' அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிரதமர் மோடி பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை, 71 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர்.


கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த ஆய்வில் பிரதமர் மோடி தேர்வானார். மோடியை 70 சதவீத பேர் ஆதரித்தனர். இந்தாண்டும் மோடி 71 சதவீதம் ஆதரவு பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.


latest tamil news



விவரம்:
பிரதமர் நரேந்திர மோடி : 71 %


மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ் : 66 %

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் : 46 %

பிரேசில் அதிபர் போல்ஸ்சோனோரோ : 37 %

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்: 26 %

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X