சென்னை:பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய குரங்குக்கு அறுவை சிகிச்சை செய்து, வனத் துறையினர் மறுவாழ்வு கொடுத்து உள்ளனர்.
சென்னை புறநகரில், 'பாநெட் மகாக்' வகை குரங்கு ஒன்று, பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டனர்.இந்த குரங்கு உடனடியாக, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் ஆய்வுக்கு பின், பெசன்ட் நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டது.
குரங்கின் இடுப்பு பகுதியில், அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இடுப்பு, வயிறு, கை, கால் பகுதிகளில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து குரங்கின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இறக்கும் நிலையில் இருந்த ஒரு குரங்கை, உரிய நேரத்தில் மீட்டு, அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வனத்துறையினர் மறு வாழ்வு அளித்துள்ளனர்.
இதில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்களுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு பாராட்டு தெரிவித்துள்ளார்.முக்கியத்துவம் என்ன?மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 'பாநெட் மகாக்' வகை குரங்குகள் பரவலாக உள்ளன. அடர்ந்த வனப்பகுதிகளை காட்டிலும், மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், இவ்வகை குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன.
குழுவாக ஓரிடத்தில் இருந்து, வேறு இடத்துக்கு செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், ஒழுங்கு முறையை கடைப்பிடிப்பது, இவ்வகை குரங்குகளின் சிறப்பு தன்மை. இவை மனிதர்களிடம் எளிதில் நெருக்கமாகிவிடும். சென்னை கிண்டி தேசிய பூங்காவில், இவ்வகை குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE