சென்னை:தமிழகத்தில் நேற்று நடந்த 'பூஸ்டர்' தடுப்பூசி முகாமில், 50 ஆயிரத்து, 598 பேர் பயனடைந்துஉள்ளனர்.
நாடு முழுதும், ஒமைக்ரான் வகை தொற்றால், கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அதனால், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, ஒன்பது மாதங்கள் என, 273 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு, 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோயுள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில், வாரந்தோறும் சனிக் கிழமைகளில், மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவது போல், வியாழக் கிழமைதோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் முகாம், துவங்கியது. அதில், 50 ஆயிரத்து, 598 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும், 15 முதல் 18 வயது வரையிலான, 6,501 பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட, ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 514 பேர் என, மொத்தமாக, ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து 15 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகம்
சென்னை மாநகராட்சியில், 21 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட, நேற்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. அதில், 20 ஆயிரத்து, 69 பேர் என, 96 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மேலும், 1,091 சிறார்கள் உள்பட, 30 ஆயிரத்து, 14 பேருக்கு, சென்னையில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE