பழநி தண்டாயுதபாணி கோவிலில், 23.81 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு திட்டம், அன்னதானக் கூடம், மின்துாக்கி, நாதமணி மண்டபம் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்தார்.
பழநி கோவில், தங்கும் விடுதிகள் மற்றும் சார்பு நிறுவனங்களுக்கு குடிநீர் வழங்க, 72 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டு, நேற்று பயன்பாட்டிற்குவந்தது. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக, 13 நபர்கள் செல்லும் வகையில், 23.98 லட்சம் ரூபாய் மதிப்பில், 'லிப்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
புதிதாக நாதமணி மண்டபம், 27.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்கள் வசதிக்காக, 58.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 108 இருக்கைகளுடன் கூடிய புதிய கூடம் கட்டப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரருக்கு ஊக்கத்தொகை
சென்னையில், ஒன்பதாம் வகுப்பு மாணவன் பரத் சுப்ரமணியன், 2013 முதல் தன் ஐந்தாவது வயதில் இருந்து, சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2019ல் சர்வதேச மாஸ்டர் பட்டம், இந்த ஆண்டு 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த 2019ல் சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றதற்காக, 3 லட்சம் ரூபாய்; இந்த ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதற்காக, 5 லட்சம் ரூபாய் என, மொத்தம் 8 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
குடும்ப பராமரிப்பு உதவித்தொகை
தமிழக இயல் இசை நாடக மன்றம் சார்பில், மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு, குடும்பப் பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், 15 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் காசோலைகள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE