புதுடில்லி:''பொய்ச் செய்திகளை வெளியிட்டு நாட்டுக்கு எதிராக சதி திட்டத்தில் ஈடுபடும் 'யுடியூப் சேனல்கள்' மற்றும் இணையதளங்கள் முடக்கப்படும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.
நாட்டுக்கு எதிராக பொய்ச் செய்திகளை வெளியிட்டதாக 20 யுடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை முடக்கி மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை டிசம்பரில் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளதாவது: சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளை வெளியிட்டு நம் நாட்டுக்கு எதிராக சிலர் சதியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட யுடியூப் சேனல்கள், இணையதங்கள் முடக்கப் பட்டு உள்ளன.இதற்கு பல நாடுகள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. யுடியூப் நிறுவனமும், நம் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியுள்ளது.பொய்ச் செய்திகளை வெளியிடும், நாட்டுக்கு எதிராக சதி செய்யும் சமூக வலைதளங்களை முடக்கும் நடவடிக்கை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE