ரூ.500 கோடி ஊழலா? பழனிசாமிக்கு அமைச்சர் சவால்!

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை:'பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் குறித்து, பழனிசாமி என்னுடன் விவாதிக்க தயாரா? இல்லையெனில், அவர் தன் தவறான குற்றச்சாட்டுக்கு, மன்னிப்பு கேட்க வேண்டும்' என, உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:துரோகத்திற்கும், நன்றி கொன்ற செயலுக்கும் பெயர்போன பழனிசாமி, பொங்கல் தொகுப்பு கொள்முதலில், 500 கோடி ரூபாய் ஊழல் என்றும், தரமற்ற பொருட்கள்

சென்னை:'பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் குறித்து, பழனிசாமி என்னுடன் விவாதிக்க தயாரா? இல்லையெனில், அவர் தன் தவறான குற்றச்சாட்டுக்கு, மன்னிப்பு கேட்க வேண்டும்' என, உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:துரோகத்திற்கும், நன்றி கொன்ற செயலுக்கும் பெயர்போன பழனிசாமி, பொங்கல் தொகுப்பு கொள்முதலில், 500 கோடி ரூபாய் ஊழல் என்றும், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், நா கூசாமல் அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.மொத்தம் 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, குறுகிய காலத்தில் 21 வகையான பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்பதற்காக, உரிய முறையில் விலைப்புள்ளி கோரப்பட்டது.
குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு, கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. சில இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதை, மாற்றிக் கொடுத்ததோடு, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழனிசாமி ஆட்சியில், பொங்கலுக்கு 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் வாங்க, 45 ரூபாய் வழங்கினார். தற்போது, ௬௨ ரூபாய்க்கு 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் வாங்கி உள்ளோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் ஏன் அதிகமாக செலவழித்தனர் என்பதற்கு பதில் கூறாமல் வசைபாடி உள்ளார். கடந்த ஆட்சியின் இறுதியில், பருப்பு கிலோ 120 ரூபாய் 50 காசு என இறுதி செய்யப் பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து, கிலோ 78 முதல் 86 ரூபாய் வரை விலை இறுதி செய்து, பருப்பு கொள்முதல் செய்தோம்.இதில் மட்டும் ஒரு மாதத்திற்கு, 74.75 கோடி ரூபாய் அரசால் மீதப்படுத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்துவிட்டு, அபாண்டமான ஆதாரமற்ற குற்ற்ச்சாட்டை பழனிசாமி கூறியுள்ளார். அவர் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் குறித்து, என்னுடன் விவாதிக்க தயாராக உள்ளாரா? இல்லையெனில், அவர் தன் தவறான குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
21-ஜன-202209:18:41 IST Report Abuse
R.RAMACHANDRAN தற்போது நல்ல துவரம் பருப்பு கொடுக்கின்றனர்.இது தொடர வேண்டும்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
21-ஜன-202203:43:03 IST Report Abuse
BASKAR TETCHANA உன் திருவிளையாடலை ஸ்டாலினோடு நிறுத்தி கோல் வீணாக பொது மக்களிடம் விளையாடாதே. நீங்கள் விலை கொடுத்து வாங்கிய நாளிதழ்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாக படம் கான் பிக்கின்றனர்.இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் உனக்கு. இந்த லெட்சணத்தில் உறுப்பிடாத உன் தலைவன் நேரில் ஆய்வு நடத்துகிறான். அதில் உண்மையான வெள்ளம் பலவகை பொருள்கள் இருந்தன. இதெல்லாம் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். ஆனால் அவன் தி.வி.யை பார்த்து இருக்க மாட்டான். மக்கள் நீ கொடுத்த பொருட்களை ரோட்டில் கொட்டியதை பார்த்தாயா. எங்களை கூப்பிடு நாங்கள் வருகிறோம் நீ கொடுத்த பொருட்களை எடுத்து கொண்டு. அப்போது உண்மையை இருந்தால் உன் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு பொது மக்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ப்பாயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X