கலசப்பாக்கம் :கலசப்பாக்கம் அருகே, ஒரு தரப்பைச் சேர்ந்த ஆண்கள் தலைமறைவாக உள்ள நிலையில், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த வீரளூரில் கடந்த 16ம் தேதி, அருந்ததியர்
காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பதற்றம்
மூதாட்டியை அடக்கம் செய்ய, ஊரில் ஆண்கள் யாரும் இல்லாததால், நேற்று மாலை 4:30 மணியளவில் அவரது மகன் பொன்னுசாமி மட்டும் பங்கேற்க, பெண்களே இறுதி சடங்குகள் செய்தனர். பின், பெண்களே சடலத்தை தோளில் சுமந்து, வேனில் ஏற்றி மயானத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால், எஸ்.பி., பவன்குமார் ரெட்டி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE