காரைக்குடி - திருவாரூர் ரயில் பயண நேரம் குறைப்பு

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை:காரைக்குடி - திருவாரூர் பயணியர் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு ரயில் பயணியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.காரைக்குடி - திருவாரூர் இடையே 2019ம் ஆண்டில் இருந்து பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காரைக்குடி - திருவாரூர் இடையே பயண நேரம் 6 மணி 15 நிமிடமாக இருந்தது.இப்பாதையில் வழியில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளில் ஊழியர்கள் இல்லாததால் ரயிலில் வரும் கேட்

சென்னை:காரைக்குடி - திருவாரூர் பயணியர் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு ரயில் பயணியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
காரைக்குடி - திருவாரூர் இடையே 2019ம் ஆண்டில் இருந்து பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காரைக்குடி - திருவாரூர் இடையே பயண நேரம் 6 மணி 15 நிமிடமாக இருந்தது.இப்பாதையில் வழியில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளில் ஊழியர்கள் இல்லாததால் ரயிலில் வரும் கேட் கீப்பர் ரயிலை நிறுத்தி கேட்டை முடிவிட்டு ரயில் சென்றபின் மீண்டும் கேட்டை திறந்துவிட்டு அதே ரயிலில் அடுத்த 'கேட்' திறக்க பயணிப்பார்.
இந்நிலையால் தான் பயண நேரம் அதிகமானது. தற்போது 34 கேட்டுகளில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாலும் சில கேட்டுகள் மூடப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாலும் ரயில் பயண நேரம் வரும் 26ம் தேதியில் இருந்து 4 மணி 45 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ரயில் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை இயக்கப்படுகிறது. திருவாரூரில் காலை 8:15 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 9:58 மணி பேராவூரணிக்கு 10:54 மணிக்கும் காரைக்குடிக்கு மதியம் 1:00 மணிக்கு சென்றடையும்.காரைக்குடியில் இருந்து மாலை 3:00 மணிக்கு புறப்பட்டு பேராவூரணிக்கு மாலை 4:44 மணிக்கும் பட்டுக்கோட்டைக்கு மாலை 5:33 மணிக்கும் திருவாரூருக்கு. இரவு 7:45 மணிக்கும் சென்றடையும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
21-ஜன-202209:38:19 IST Report Abuse
R Hariharan நன்றி. இந்த தடத்தில் தாம்பரம் காரைக்குடி, தாம்பரம் செங்கோட்டை, வேளாங்கண்ணி எர்ணாகுளம் ரயில்கள் அறிவிக்க பட்டு இன்று வரை விடவில்லை. கூடிய சீக்கிரம் ரயில் சேவை தொடங்க்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி விட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X