தவறு செய்தால் தண்டனை: ராஜகண்ணப்பன்| Dinamalar

தவறு செய்தால் தண்டனை: ராஜகண்ணப்பன்

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (1) | |
அவனியாபுரம்:''யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்பு,'' என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: பொங்கல் விழாவின் போது தமிழக போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டதால் பயணிகள் யாருக்கும் இடையூறு இல்லை, எந்த புகாரும் இல்லை.பொது முடக்கத்தின் போது அதிகாரிகளை வைத்து பஸ்களை சரியாக அனுப்பியதால் பொது மக்கள் நிம்மதியாக

அவனியாபுரம்:''யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்பு,'' என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: பொங்கல் விழாவின் போது தமிழக போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டதால் பயணிகள் யாருக்கும் இடையூறு இல்லை, எந்த புகாரும் இல்லை.பொது முடக்கத்தின் போது அதிகாரிகளை வைத்து பஸ்களை சரியாக அனுப்பியதால் பொது மக்கள் நிம்மதியாக பயணித்தார்கள்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்துவது எவ்வித உள்நோக்கமும் இல்லை. உப்புத் தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்பு. இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X