மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (13)
Advertisement
புதுடில்லி : 'மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவு செல்லும்' என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.8
EWS quota, SC, Supreme Court,உச்ச நீதிமன்றம்

புதுடில்லி : 'மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவு செல்லும்' என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


8 லட்சம் ரூபாய்


இதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், இந்த இடஒதுக்கீடுகளை 2021 - 2022 கல்வியாண்டிலேயே வழங்க அனுமதி அளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான வருவாய் உச்சவரம்பை இந்த கல்வியாண்டு மட்டும் 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க அனுமதி அளித்திருந்தது.

இந்த வழக்கில் விரிவான தீர்ப்பை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா அமர்வு, நேற்று அளித்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தகுதி என்பது சமூக, பொருளாதார பின்னணியையும் மதிப்பதாக இருக்க வேண்டும்.


latest tamil newsபின்தங்கியுள்ளோருக்கு தீர்வாக இருப்பதால் இடஒதுக்கீடு தொடர வேண்டும். இடஒதுக்கீடு என்பது தகுதிக்கு தடையாக இருப்பதாக கூற முடியாது. அதே நேரத்தில் சமூக நீதியை பரவலாக்குகிறது. கொரோனாவால் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விஷயத்தில் மேலும் இழுபறி ஏற்படுவதை நீதிமன்றம் விரும்பவில்லை.


விரிவான விசாரணை


ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவு, சட்டத்துக்குட்பட்டே எடுக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான வருவாய் உச்ச வரம்பு தொடர்பாக விரிவான விசாரணை, மார்ச் மூன்றாவது வாரத்தில் துவங்கும். கடந்த 7ம் தேதி அளித்த உத்தரவின்படி இந்த இரண்டு இடஒதுக்கீட்டையும் 2021 - 2022 கல்வியாண்டில் கடைப்பிடிக்கலாம். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
21-ஜன-202210:05:47 IST Report Abuse
RandharGuy என்னதான் இருந்தாலும், தகுதி தகுதிதான் - மன்மோகன் சிங் எங்கே ....
Rate this:
Cancel
21-ஜன-202210:01:46 IST Report Abuse
ஆரூர் ரங் நோயாளிகளின் நன்மைக்காக அவரவர் சீட் பெற்ற கோட்டா பெயர் பொறித்த பேட்ச் அணிய சொல்ல வேண்டும். அது நோயாளியின்👍 தற்காப்புக்கு உதவும். தரமற்ற மருத்துவர்கள் சிகிச்சை மூலம் சுவர்க்கம்போக வேண்டிய அவசியமே நோயாளிக்கு இல்லை. நேற்று கூட ஒரு வசதியான முஸ்லிம் நண்பர் தனது பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்காமல் சாதி பற்றி கல்வி நிலையத்துக்கு தெரிவிக்காமல் சேர்த்ததை பாராட்டினேன். வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வு இல்லாமல்👏👏 வாழ்வார்
Rate this:
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
21-ஜன-202214:06:42 IST Report Abuse
Vivekanandan Mahalingamமுஸ்லிம்க்கு ஜாதி சான்றிதழ் ?...
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
21-ஜன-202209:38:11 IST Report Abuse
Ramesh Sargam ஓ.பி.சி. அடிப்படையில் மருத்துவம் படித்து வெளிவரும் மருத்துவர்கள், மற்றும் தகுதியின், அதாவது நன்றாக படித்து அதிகம் மார்க் ஸ்கோர் செய்து மருத்துவம் படித்து வெளிவரும் மருத்துவர்கள் இடையே அதிக வித்தியாசம் இருக்கும். என்னதான் இருந்தாலும், தகுதி தகுதிதான்.
Rate this:
raja - Cotonou,பெனின்
21-ஜன-202211:03:10 IST Report Abuse
rajaநான் ஓபிசி தான்... மத்திய அரசின் நேரடி கல்விநிலையத்தில் படித்தவன்தான்.. ஆனால் நான்தான் கோல்ட் மெடல் வாங்கியவன்... இப்போ சொல்லு ஓ பி சி தகுதி இருக்கா இல்லயான்னு.....
Rate this:
kumarsiva - chennai,இந்தியா
21-ஜன-202214:57:44 IST Report Abuse
kumarsivaஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் சாதிவெறி பிடிச்ச உயர்சாதிக் கூட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் செருப்படி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X