விதியை மீறி அரசு சின்னம் பயன்படுத்தினால் நடவடிக்கை: டி.ஜி.பி., எச்சரிக்கை

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை : 'அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர, ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள் என, யாராக இருந்தாலும், மத்திய, மாநில அரசு சின்னங்கள், முத்திரைகளை பயன்படுத்தக் கூடாது' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகள்,
DGP, Sylendra Babu, govt_logo

சென்னை : 'அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர, ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள் என, யாராக இருந்தாலும், மத்திய, மாநில அரசு சின்னங்கள், முத்திரைகளை பயன்படுத்தக் கூடாது' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு கமிஷன்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மத்திய, மாநில அரசு முத்திரைகள், கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருகின்றனர். பல்கலை அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தாரும் பயன்படுத்துகின்றனர். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


அரசு விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட, பதவியில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் அதிகாரிகளை தவிர, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என, யாராக இருந்தாலும், அரசின் சின்னங்கள், முத்திரைகள், பெயர் பலகைகள், வாகன 'ஸ்டிக்கர்'கள், 'லெட்டர்பேடு, விசிட்டிங் கார்டு' என, எதிலும் பயன்படுத்தக் கூடாது.

மீறுவோர் பற்றி, பொது மக்கள் காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். குற்றம் செய்த நபர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கலாம். மேலும், வாகனங்களில் பதிவு எண் பலகைகள் அல்லது வாகனங்களின் வேறு பகுதிகளில், அரசின் சின்னங்கள் மற்றும் பெயர்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, மோட்டார் வாகன சட்டங்களின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சின்னங்களை சாட்சிகளின் முன்னிலையில் பறிமுதல் செய்ய வேண்டும். அதை, வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-ஜன-202214:38:52 IST Report Abuse
Cheran Perumal அப்படி தவறாக பயன்படுத்துபவர் திமுக காரராக இருந்தால் தமிழ்நாடு போலிஸ் சல்யுட் அடித்து போகச்சொல்லும் என்பது ஊரரிந்த விஷயம். முதன்முறையாக தமிழகத்திற்கு ஒரு தமாஷ் டிஜிபி.
Rate this:
Cancel
21-ஜன-202212:42:22 IST Report Abuse
ஆரூர் ரங் அரசின் சின்னம் இந்து(மதுரை) கோவில் கோபுரம். ஆனா நாத்திக அரசியல்வாதிகளும் பெருமையா பயன்படுத்துகிறார்கள். ஹிந்துத்துவத்தை வெறுக்கும் அன்னிய கைத்தடி கிரிப்டோ கும்பலும்😛 போட்டுக் கொள்வது வேடிக்கை. இந்த ஹாஸ்யத்தை ஏன் தடுக்கிறார்?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜன-202210:03:37 IST Report Abuse
Lion Drsekar இதற்கு ஒரே காரணம் இந்த சின்னம் பொறித்த வாகனங்களுக்கு தனி செல்வாக்கு, சுங்க வரி கிடையாது, எங்குவேண்டுமானாலும் நிரூபித்தலாம், எந்த பாதையிலும், எவ்வளவு வேகத்திலும் செல்லலாம், இது போன்ற சின்னம் பூரித்த வானங்களும் பொதுமக்கள் பின்பற்றும் அதே சட்டத்தை பின்பற்றினால் இவர்களுக்கு மக்களிடத்தில் மதிப்பும் கூடும், ஓய்வு பெற்று மக்கள் வரிப்பணத்தில் பென்சன் பெரும் பெரும்புள்ளிகளும் மக்களாகவே வாழ முற்படுவார்கள், சட்டம் என்பது எல்லோருக்கும் பொது என்ற அடிப்படையில் நடைமுறையில் இருப்பவர்கள் நடந்துகொண்டால் அந்த தனிமனித ஒழுக்கம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டும் அல்ல தாங்களும் ஒரு இந்திய மன்னிக்கவும் ஒன்றிய பிரஜையாக வாழ முற்படுவார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X